ஐன்ஸ்டீன் ஒருமுறை கணப்பு அடுப்பின் அருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டு படித்து கொண்டிருந்தார். திடீரென கணப்பு அடுப்பில் தீசுவாலை எழுந்ததால் வெப்பம் பரவியது. உடனே ஐன்ஸ்டீன் சத்தம் போட்டு வேலைக்காரியை அழைத்து அடுப்பை தள்ளி வைக்க கூறினார். அதற்கு வேலைக்காரி நீங்கள் சற்று தள்ளி அமர வேண்டியதுதானே என்றார். அட இந்த சின்ன விஷயம் தெரியவில்லையே என்று வருத்தப்பட்டாராம்.
----------------------------------
ஜெர்மானிய நாட்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் ஒரு ஞாபக மறதிக்காரர். ஒருமுறை வெளியில் எதற்கோ சென்ற அவருக்கு வீட்டு முகவரி மறந்து விட்டது. எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வரவில்லை..{ நம்ம றெனி மாதிரி..!} வழியில் அவர் பணிபுரியும் நிறுவன விளம்பர பலகையைக் கண்டார்.. அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முகவரியைக் கேட்டார்.. அவர்களோ, அது ரகசியம்.. வெளியார் எவருக்கும் அறிவிக்க மாட்டோம் என்றனர். ஐன்ஸ்டீன் நான் வெளியாள் அல்லன்.. நான் தான் அந்த ஐன்ஸ்டீன்.. என்றாராம் பரிதாபமாக...!!!
வியாழன், 16 அக்டோபர், 2008
நியூட்டன் நகைச்சுவை
ஒரு முறை தன் வீட்டில் ஒதுங்கிய பூனையும் அதன் குட்டிகளையும் பராமரிக்க ஒரு சிறிய மர வீட்டை கட்டலாம் என்று யோசித்தார். அதற்கான் டிசைனும் செய்தார். பூனைகள் படுக்க மெத்தை போன்றதொன்று உள்ள அறை, கழிப்பிடம் முதலியவைகளை திறம்பட அமைத்தார். பெரிய பூனை செல்ல பெரிய கதவும், சிறிய பூனை செல்ல சிறிய கதவும் கூட அமைத்தார்.ஒரு மர தச்சனிடம் டிசைனை காட்டி இதுபோல் வீடு வேண்டுமென்றார்.அவன் சிரிக்க ஆரம்பித்தான். காரணம் கேட்க,பூனைகள் படுக்கைகளையும், கழிப்பிடத்தையும் பயன்படுத்த வேண்டுமானால் பழக்கலாம். ஆனால், பெரிய கதவை பயன்படுத்தியே சிறிய பூனையும் நுழையகூடியதாய் இருக்க சிறிய கதவையும் அமைத்தை கண்டு சிரித்தேன் என்றான்
கலைவாணரின் நகைச்சுவை
ஒருமுறை கலைவாணர் நாடகத்தில் கோமாளியாக நடித்தார். ராஜா வேடமிட்டவர் மந்திரியைப் பார்த்து ஒவ்வொரு சிற்றரசரும் என்ன கப்பம் கட்டினார்கள் என விசாரிக்கும் காட்சி.ஒரு கட்டத்தில் கலிங்க ராஜா என்ன கட்டினார் என்று கேட்க மந்திரி வசனத்தை மறந்து பேய் முழி முழிக்க, இதை அறியாத அரசர் இன்னுமொரு தடவை சத்தமாக கேட்டார்..கலிங்க ராஜா என்ன கட்டினார்..?கலைவாணர் உடனடியாக " வேஷ்டி" என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது.
பிரபலங்களின் நகைச்சுவை
ஒருமுறை நம்ம ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து அவர் வெளியே போயிருக்க, கொஞ்சம் நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் கழுதை என்று எழுதி வைத்து சென்றாராம்.வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம் லிங்கம், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார் வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)